குளிர்ந்த இரவில்
தனிமை துணை கொண்டு
ரயில் பயணம்..
சிதறிய சாரலில்
சில்லிட்டு போனது
ஜன்னல் கண்ணாடி..
பனி படர்ந்த
ஜன்னல் திரையில்
விரல் தூரிகைகொண்டு
கோலம் தீட்டினேன்...
முடிவில் முளைத்திருந்தது
உன் பெயர்
பனியில் படமாய்..
விரல் வகுத்த வழி
விழி பயணித்தது
மீண்டும் மீண்டும்
என்னை சுற்றும்
உன் நினைவுபோல்...
தன்னிலை அடைந்தபோது
நின்றுபோயிருந்தது மழை
உன் பெயரை
அழிக்க மனமில்லைபோலும்
என்னை போன்றே....


